வியாழன், 25 அக்டோபர், 2012

மீண்டும் செளதிப் பயணம்

  நான் தற்போது மீண்டும் செளதிஅரேபியா பயணப்பட்டுள்ளேன். ஆனால் தற்போது எனது மகனுடன் பயணம், காரணம் அவருக்கு ஒரு வேலையில் அமர்த்த, நானும் புதிய நிறுவனத்தில் சேரவும்.
       படத்தில் மகனுடன்.

Post Comment

வியாழன், 26 ஏப்ரல், 2012

தாயகம் (தமிழகம்)திரும்பியது

Extension Factory Builder
நான் தற்போது தாயகம் திரும்பியுள்ளேன் ரியாத் - கொலும்பு - சென்னை
அப்போது இடையில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திருவணந்தபுரம் அவசரமாய் தரையிறக்கப்பட்டு பின் கொலும்பு சென்றது
இதில் வேடிக்கையென்னவென்றால் ரியாத் - கொலும்பு - திருவணந்தபுரம் செல்லும் பயணிகள் அங்கு இறக்கப்படாமல் பின் கொலும்பிலிருந்து அடுத்த நாள் கொலும்பு - திருவணந்தபுரம் சென்றார்கள் என்ன வொரு விமானச் சேவை
இந்த லங்கா விமானச்சேவை. நானும் இதுபோல சென்னையில் இருந்து சேலம் பதிவு செய்யப்பட்டு இருந்த இரயில் பயணம் ரத்துசெய்து பின் அல்லல் பட்டு பஸ் பயணம் தான்
என் பேரன் தர்சனை தரிசனம் செய்தபின் பயணக்களைப்பு பறந்தோடியது

அதுமட்டுமல்ல இங்கு நமது உறவுகளைக்கண்டு, இயற்கையெழில் கொஞ்சும்



காட்டுவெளிப்பகுதியில் என் மனம் பிடிக்க (கைப்பேசி வழியாக) இந்தபடங்களை நீங்களும்தான் ரசியுங்களேன்

Post Comment

வெள்ளி, 27 ஜனவரி, 2012

இரத்தம் (தான மனம்)உள்ளவர்கள் சுட்டிய்யத் தட்டுங்களே!

இரத்தம் அதன் முக்கியத்துவம் பற்றி நான் சொல்லித் தெரிவதில்லை நல்ல (இரத்த) மனம் படைத்தவர்கள்  இந்த தளம் சென்று பதிவு செய்யுங்கள் ஏதோ
நான் இங்கிருந்து செய்ய முடிந்தது இதுதான்( ரத்தம் கொடுக்க ஆசைதான்)

Indian database of blood donors - Donate Blood ! Save a life !:

'via Blog this'

Post Comment

வியாழன், 26 ஜனவரி, 2012

கா(மோ)தல்


மோதலில் காதல் வந்தது
காதலில் கனவு தெரிந்தது
கனவினில் வாழ்வு பிறந்தது
வாழ்வினில் வசந்தம் தந்தது
வசந்தத்தினால் மனதில் பூப்பூத்தது
மனதினில் தெளிவு பிறந்தது
தெளிவினில் புரிந்தது….
காதலுக்கு (பார்வை) மோதல் தேவை
காதலுக்கு (கருத்து) மோதல் தேவை
எனவே மோதுங்கள் காதல் பிறக்க…..
                ……கன்னையன் மணி

Post Comment