வெள்ளி, 30 டிசம்பர், 2011

மீண்டும்


காலத்தை இருந்தபோது சரியாக பயன்படுத்தாது
காலம் சென்றபின் வருத்தப் படுதலாகாது


காலத்தை வகுத்தவன் ஒரு நாளுக்கு 24 மணித்தியாளம்
என்பதை கால நீட்டிப்பு செய்திருக்கலாகாதோ?


காலத்தின் கொடுங்கோலாட்சி 
காத்திருக்கும்போது தெரிகிறது
கொடிது கொடிது காத்தல் கொடிது.
அதனினும் கொடிது உரையாடல் இல்லாதது..
-எனது விடுமுறை வீணே போனது கண்டு


கடந்து வந்த பாதையை திரும்ப பார்த்தால்
நடந்து போகும் பாதையை திருத்த வாய்ப்புக் கிட்டும்

Post Comment

என்னுள்


கடந்து வந்த முட்பாதைகூட மலர்பாதையாகும் 
மனம் பக்குவப்படும் போது


என்னுள் புதைந்து கிடந்ததை வெளிக்கொணர்ந்தபின் மூப்பு மறைந்து இளமைதிரும்பியது போலுணர்கிறேன்


வாழ்க்கையின் அர்த்தம் வாழ்ந்தபின் புரிகிறது
வாழும்போது தெரிந்தால் செம்மையாய் வாழ்லாம்
பிரிவின் அர்த்தம் பிரிந்தபின் புரிகிறது, ஏன்
பிரிந்தோமென்று.


நான் ஒரு சுயநலவாதியாகிறேன்
மற்றவர் நலமாய் வாழவேண்டி நான் வாழும்போது


திருடன் திருடுகிறான் எப்போது? எதனால்? இல்லாமை..
(கையில், யாரும்)


எதிரியும் நல்லவனாய்த் தெரிவான்,
நாம் அவனாய் இருந்துப் பார்க்கும் போது.


கடந்து வந்த பாதையை திரும்ப பார்த்தால்
நடந்து போகும் பாதையை திருத்த வாய்ப்புக் கிட்டும்


விஞ்ஞான வளர்ச்சிக் கண்டு வியப்படைகிறேன், அதே சமயம் வருத்தப்படுகிறேன் எனது மூப்பின் காரணமாய், எனது கடந்துபோன(வாலிப) வயதில் குடும்பசூழல் காரணமாய், இன்று ஏன் நான் புதிதாய் பிறக்கக் கூடாதா என்று?
மனிதன் பிறந்து இறக்கிறான்
கவிஞன் இறந்தும் பிறக்கிறான் பன்(ண்)முறை


நாவு நோவாமல் நயம்படப் பேசு
நாந(ண)யம் பெறுவாய்


கவியின் கவி வாழும்
புவி வீழும் வரை
http://manikannaiyanin.blogspot.com/(கன்-மணியின் சிந்தனைச் சிதறல்கள்)

Post Comment

வியாழன், 29 டிசம்பர், 2011

என்றோ உதித்தது!!!



காலம் கடந்தபின்தான் காலத்தின் அருமைதெரிகிறது.
நாளையப் பொழுது நல்லதாய் விடியட்டும்.

எது நடந்தாலும் காரணம் நாமே!,
அது விடுத்து மற்றவரைக் குறை கூறுவதை விடுவது நலமே!!

செய்யும் காரியத்தைச் சிரத்தையுடன் செய்தால் நல்லதே நடக்கும்.

நமக்கு நல்லது நடக்குமென்று எதிர்பாராமல்,
மற்றவர்க்கு உதவும் எண்ணம் வேண்டும்.

Post Comment

திங்கள், 26 டிசம்பர், 2011

இரத்ததானம் பற்றி


இரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வேண்டியது...

     நீங்கள் உங்களது ரத்தத்தை தானம் செய்பவரா? உங்கள் ரத்த வகை எந்தெந்த ரத்த வகையோடு சேரும் என உங்களுக்கு தெரியுமா? கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.


இரத்த வகைகள்


எந்த வகையினருக்கு தரலாம்?
எந்த வகையினரிடமிருந்து பெறலாம்?
A+
A+, AB+
A+, A-. O+, O-
O+
O+, A+, B+, AB+
O+, O-
B+
B+, AB+
B+, B-, O+, O-
AB+
AB+
எந்த வகையினரிடமிருந்தும் பெறலாம்
A-
A+, A-, AB+, AB-
A-, O-
O-
எந்த வகையினருக்கும் தரலாம்
O-
B-
B+, B-, AB+, AB-
B-, O-
AB-
AB+, AB-
AB-, A-, B-, O-
This table was created with Compare Ninja.
நண்பர்களே, மேற்கண்ட அட்டவணையை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவலாம்.

நன்றி :- http://www.tamilvaasi.com நண்பர் தமிழ்வாசி அவர்கள் பதிவிலிருந்து

Post Comment

செவ்வாய், 6 டிசம்பர், 2011

கனவு – 2


கனவு – 2
டிக்கும் போது கூட (பள்ளிப்படிப்பு) தற்போது திரு.அப்துல்கலாம் அவர்கள் கூறியது போல அதிக கனவுகள் காண்பதுண்டு ஏதேனும் பலிக்கக் கூடாதா? என்று. நான் படித்தது உயர்நிலைப்படிப்பு அன்றைய 11ம் வகுப்பு பொறியியல் துறை விருப்பப்பாடமாக எடுத்து படிக்கும் போது கூட அதில் ஒரு பாடப்பிரிவான தச்சுத்தொழில் மற்றும் தகரத்தொழில் கற்றதால் எனக்கு சொந்தமான வீடு கட்டுமானப் பணியினை என் மனதில் கற்பனையாய் வரிந்து இருந்தேன். அது எப்போது நனவாகுமோ? தற்போது கூட கட்டுமானத்துறையில் பலப்புதிய நுணுக்கங்களைக் கொண்டு நல்லதொரு வீட்டை வடிவமைத்துள்ளேன்(கற்பணையில்) காலம் தான் பதில் தரும்.
ன் மகன் நான் படிக்க முடியாத பொறிஞர் பட்டயப்படிப்பு படித்தது கண்டு மிகவும் சந்தோசப் படுகிறேன். அதே நேரத்தில் அவருக்கு படிப்புக்குத் தகுந்த நல்லதொரு தொழில் அமைந்து அவரது வாழ்க்கை சிறக்கக் கனவுக் காணுகிறேன். பிறகுதான் இதற்க்கு முன் நான் கண்ட கனவை நனவாக்க வாய்ப்பு வரும்.
ன்னடா இவன் இதுவரை தன் வாழ்க்கைக்கனவுப் (சுயநலமாய்) பற்றியே கூறுகிறேனே என்று திட்டாதீர்கள். எனக்குப் பொதுநலத்திலும் அக்கறையுண்டு நம் நாடு என்பதைவிட உலகம் முழுவதும் ஒன்றாய் வாழ (ஒற்றுமையாய்) அந்த உலகைக் காண்பதற்க்கு. எங்குப்பார்த்தாலும் சன்டை மொழி வாரியாய், இனவாரியாய் இது இல்லாமல் உள்ள உலகைக் காணக் கனவுக்காணுகிறேன்.
ங்கு பணிப் புரியுமிடத்தில் கூட அனைவரும் கேட்பதுண்டு ஏன் தங்களுக்குக் கோபமே வராதா? என்று நான் இருக்குமிடத்தில் எப்போதும் கலகலப்பாய். பொதுவாய் சிந்தித்துப்பார்த்தால், கோபப் பட்டவன்கூட நான் ஏன் கோபப்பட்டோம் என்று வெட்கித்தலை குனியவேண்டும்.
கனவுகள் தொடரும்….               

Post Comment

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

Magazine - AlphaWebSoftPals

Magazine - AlphaWebSoftPals: "மின் விளக்குகள்
By CM


எடிசன் என்னும்
குயவனின் தயவில்
வெற்றிடக்குடுவைகளில்
உலகமெங்கும்
கார்த்திகை தீபங்கள்

-copy"

'via Blog this'

Post Comment

Magazine - AlphaWebSoftPals

Magazine - AlphaWebSoftPals: "ஏப்பம் விடும் ஓடையை இப்போதுதான் பார்க்கிறேன்
By CM


மலையில் இருந்து

குதித்தாலும்

சிரிக்கிறாள்

இந்த அதிசயப்பெண்

அருவி"

'via Blog this'

Post Comment

வியாழன், 1 டிசம்பர், 2011

சகாகா - செளதி அரேபியா

நான் கடந்த ஒரு வார காலமாக சகாகா எனும் சிறிய நகரத்தில் பணிசெய்துகொண்டிருக்கிறேன் அங்கு என் கைப்பேசியில் அகப்பட்டதை இங்கே தருகிறேன்
                                                         விமரசிப்பவர்கள் பெட்டியில் தட்டவும்
                                         
                                            அருகிலுள்ள மசூதி இரவு நேரத்தில்



                                     சகாகாவில் உள்ள ஒரு சதுக்கத்தில்(பகலில்)



                                     சகாகாவில் உள்ள ஒரு சதுக்கத்தில்(இரவினில்)


Post Comment

செவ்வாய், 29 நவம்பர், 2011

எனது பேரனின் - National ID மாதிரி


Post Comment

சிரித்து வைப்போம்

பெண்: என்னிடம் பிரச்சனையா?, என்ன சார் அது?
அதிகாரி: நீங்க காரை வேகமா ஓட்டிட்டு வந்திங்க. அதான் பிரச்சனை.


பெண்: ஓ... அப்படியா....
அதிகாரி: உங்க டிரைவிங் லைசன்ஸ் தயவு செஞ்சு நான் பார்க்கலாமா?


பெண்: நான் தந்திருவேன். ஆனா அது இப்போ என்கிட்டே இல்லை.
அதிகாரி: என்னது... இல்லையா? ஏன்?


பெண்: குடித்து விட்டு வாகனம் ஒட்டியதுக்காக நாலு வருசத்துக்கு முன்னாடியே அதை பறிமுதல் செஞ்சுட்டாங்க.
அதிகாரி: அப்படியா? அப்போ உங்க காரின் உரிமம், ரெஜிஸ்டர் பேப்பர்ஸ் இருக்கா? நான் பார்க்கலாமா?


பெண்: ஓ... அதுவா? அதுவும் என்கிட்டே இல்லை.
அதிகாரி: ஏன் இல்லை?


பெண்: இந்தக் காரே நான் ஒருவரிடமிருந்து திருடியது. அதான் இல்லை
அதிகாரி: என்ன? இது திருடிய காரா?


பெண்: ஆமா, இந்தக் காரோட ஓனரை நான் கடத்தி கொலை செய்துட்டேன்.
அதிகாரி: (அதிர்ந்து) நீங்க என்ன சொல்றிங்க?


பெண்: அவர நீங்க பாக்கணுமா? இந்த கார் டிக்கியில பிளாஸ்டிக் பையில அவரை கூறு போட்டு கட்டி வச்சிருக்கேன்.


(அந்த அதிகாரி அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் மற்ற போலீஸ் அதிகாரிகளை சைகை மூலம் கூப்பிடுகிறார். உடனே ஐந்து நிமிடத்தில் ஒரு போலீஸ் பட்டாளமே அவர்கள் பக்கத்தில் கூடுகிறது. அந்த போலீஸ் அதிகாரி நடந்த உரையாடலை மற்றொரு அதிகாரியிடம் சொல்கிறார். அவர் அந்தப் பெண்ணை நோக்கி வருகிறார்.)


அதிகாரி 2: அம்மா உங்கள் காரை நாங்க சந்தேகப் படறோம். அதனால சோதனை போடணும். வழி விடறிங்களா?
பெண்: சோதனை போடணுமா? என்ன பிரச்சனை சார்?


அதிகாரி 2: என் அதிகாரி ஒருத்தர், நீங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து, அவரை கூறு போட்டு பிளாஸ்டிக் பையில் கட்டி காரின் டிக்கியில் மறச்சு வச்சிருப்பதாக சொன்னார். அதான் சோதனை போடணும்.
பெண்: ஓ... தாராளமா நீங்க சோதனை போடலாம்.


( கார் டிக்கியை திறந்து காட்டுகிறார். அங்கே எதுவும் இல்லை. அதிகாரிகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.)


அதிகாரி 2: அம்மா, இது உங்கள் கார் தானா? எவிடன்ஸ் இருக்கா?
பெண்: ஆமா, என்னுடையது தான். இதோ காரின் ரெஜிஸ்டர் பேப்பர்ஸ். செக் பண்ணி பாருங்க.
(அதிகாரி பார்வையிடுகிறார். எல்லா பேப்பர்ஸ்ம் சரியாக இருந்தது)


அதிகாரி 2: உங்களிடம் டிரைவிங் லைசன்ஸ் இல்லை என அந்த அதிகாரி சொன்னார். அது உண்மையா?
(அந்தப் பெண் தன் கைப்பையில் சிறிது நேரம் தேடி அவரின் டிரைவிங் லைசன்ஸ்ஐ காட்டுகிறார். அந்த அதிகாரி அதை பார்க்கிறார். அதுவும் சரியாக இருந்தது.)


அதிகாரி 2: எனது அதிகாரி, தாங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து விட்டு காரை திருடிக் கொண்டு வந்ததாக சொன்னார். அதான் உங்களையும், காரையும் சோதனை செய்தோம். எல்லாமே சரியா இருக்கு. ஆனா, ஏன் அவர்கிட்ட பொய் சொன்னிங்க?
பெண்: நீங்க மட்டும் நான் வேகமா கார் ஓட்டறேன்னு பொய் சொன்னா எப்புடி ஏத்துக்க முடியும்?


       பாருங்க நண்பர்களே, வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே!
நன்றி- தமிழ்வாசி(tamilvaasi.blogspot.com)

Post Comment