வெள்ளி, 30 டிசம்பர், 2011

என்னுள்


கடந்து வந்த முட்பாதைகூட மலர்பாதையாகும் 
மனம் பக்குவப்படும் போது


என்னுள் புதைந்து கிடந்ததை வெளிக்கொணர்ந்தபின் மூப்பு மறைந்து இளமைதிரும்பியது போலுணர்கிறேன்


வாழ்க்கையின் அர்த்தம் வாழ்ந்தபின் புரிகிறது
வாழும்போது தெரிந்தால் செம்மையாய் வாழ்லாம்
பிரிவின் அர்த்தம் பிரிந்தபின் புரிகிறது, ஏன்
பிரிந்தோமென்று.


நான் ஒரு சுயநலவாதியாகிறேன்
மற்றவர் நலமாய் வாழவேண்டி நான் வாழும்போது


திருடன் திருடுகிறான் எப்போது? எதனால்? இல்லாமை..
(கையில், யாரும்)


எதிரியும் நல்லவனாய்த் தெரிவான்,
நாம் அவனாய் இருந்துப் பார்க்கும் போது.


கடந்து வந்த பாதையை திரும்ப பார்த்தால்
நடந்து போகும் பாதையை திருத்த வாய்ப்புக் கிட்டும்


விஞ்ஞான வளர்ச்சிக் கண்டு வியப்படைகிறேன், அதே சமயம் வருத்தப்படுகிறேன் எனது மூப்பின் காரணமாய், எனது கடந்துபோன(வாலிப) வயதில் குடும்பசூழல் காரணமாய், இன்று ஏன் நான் புதிதாய் பிறக்கக் கூடாதா என்று?
மனிதன் பிறந்து இறக்கிறான்
கவிஞன் இறந்தும் பிறக்கிறான் பன்(ண்)முறை


நாவு நோவாமல் நயம்படப் பேசு
நாந(ண)யம் பெறுவாய்


கவியின் கவி வாழும்
புவி வீழும் வரை
http://manikannaiyanin.blogspot.com/(கன்-மணியின் சிந்தனைச் சிதறல்கள்)

Post Comment