புதன், 28 செப்டம்பர், 2011

நன்றி:-கணினி மென்பொருட்களின் கூடம்


நண்பர்களே

பயர்பாக்ஸ் உலாவியின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு இன்னும் இரண்டு நாளைக்குள் வெளிவரும் என்று நினைக்கிறேன்.  இப்பொழுது உள்ள பதிப்பு 6.0.2 ஆகும்.  மேம்படுத்தப்பட்ட பதிப்பு 7.0 ஆக வெளிவருகிறது.  
இதில் மெமரி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டு வேலை செய்யும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

அதிகபட்சம் 50 சதவீதம் இணையப்பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

நிறைய பாதுகாப்புகள் மேம்படுத்தப்படிருக்கின்றன.

புக்மார்க்குகள் உடனடியாக பயர்பாக்ஸ் உலாவியின் மூலமாக Sync செய்யும் வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

விண்டோஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US  Tamil Version Download

லின்க்ஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US   Tamil Version Download

மேக் பயனாளர்களுக்கான
Firefox 7.0 Stable Version Download English - US  Tamil Version Download

Post Comment

திங்கள், 26 செப்டம்பர், 2011

மழை



மழை

காய்ந்து ஓய்ந்த சூரியனுக்கு தாகம் வந்தது
அதைத் தணிக்க ஆறு குளம் எத்தனித்தது
மெல்ல மேல் எழுந்து அதன் நாவை நனைத்தது
சினந்த சூரியனும் குளிர்ந்து மறைந்தது
மேகக் கூட்டங்கள் விண்ணில் தவழ்ந்தது
அதில் சில்லென காற்றுப் பட்டு நீர் திவலையானது
மடு நிறைந்த தாய் பசுவின் பாசம் போல
மேலிருந்து தான் சுரந்து பூமி நனைந்தது 



சுட்டது

Post Comment

எனது அன்புப் பேரனின் படத்தொகுப்பு


என் அன்புப் பேரனின்(தர்சன்)
நிழல்பட தரிசனம்



தர்சன்



                                                      கிருஷ்ணஜெயந்தியன்று


தர்சன்


Post Comment

துவாத்மி பயணம்


கடந்த மாதம் துவத்மி-செளதிஅரேபியாவில் பணி செய்ய சென்ற போது


Post Comment









VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவில் இருந்து Snapshot எடுக்க

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சிலமற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.

வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி:
VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை போட்டோவாக Snapshot எடுக்க வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video - Snapshot கொடுத்தால் போதும் உங்களுக்கு பிடித்த காட்சி போட்டோவாக உங்கள் கணினியில் சேமிக்க பட்டுவிடும்.


snapshot எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும். மற்றும் போட்டோ சேமிக்கும் இடத்தையும் உங்களுக்கு காட்டும்.

Snapshot பார்மட் மாற்ற :
டீபால்டாக png பார்மட்டில் உங்களுடைய Snapshot சேமிக்க ப்படும். இதனை JPG பார்மட்டிற்கு மாற்ற விரும்பினால் Tools - Preferences - (or) Ctrl+P  கொடுத்து  வரும் விண்டோவில் Video என்பதை தேர்வு செய்யவும்.  அதில் Snap shot பகுதியில் போட்டோ பார்மட்டை மாற்றி Apply பட்டனை அழுத்துங்கள். 


ஒரே கிளிக்கில் Snapshots எடுக்க:
ஒரே கிளிக்கில் snapshot எடுக்கும் வசதி வேண்டுமெனில் View - Advanced Controls தேர்வு செய்தால் கீழே சில பட்டங்கள் தெரியும் இரண்டாவதாக உள்ள Camera ஐக்கான் பட்டனை அழுத்தினால் ஒரே க்ளிகிங் snapshot எடுக்கும் வசதியை பெறலாம். 

மேலே உள்ள முறைகளை பயன்படுத்தி VLC பிளேயர் மூலம் சுலபமாக வீடியோவில் இருந்து Snapshot எடுத்து கொள்ளலாம். 

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் கீழே ஒடுள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும் இந்த தகவல் பலருக்கு சென்றடைய ஏதுவாக இருக்கும்.
Tech Shortly


  5/5  

7 Responses to “VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவில் இருந்து Snapshot எடுக்க”

விக்கியுலகம் சொன்னது…
26 செப்டெம்ப்ர், 2011 11:24 am 
இப்படியெல்லாம் வழி இருக்கா...நன்றிய்யா மாப்ள!

கணேஷ் சொன்னது…
26 செப்டெம்ப்ர், 2011 11:28 am 
எத்தனை வசதிகளை தன்னுள் அடக்கியிருக்கிறது? நானும் இது தெரியாமல் இருந்துள்ளேன்... நன்றி!

M.R சொன்னது…
26 செப்டெம்ப்ர், 2011 11:50 am 
நல்ல தகவல் அறிய தந்தமைக்கு நன்றி நண்பரே

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
26 செப்டெம்ப்ர், 2011 12:44 pm 
தகவலுக்கு நன்றி சகோ..

NIZAMUDEEN சொன்னது…
26 செப்டெம்ப்ர், 2011 12:58 pm 
பயன்தரும் தகவல், நன்றி!

< href="http://nizampakkam.blogspot.com/2011/09/16.html">

DEVAN SANJIVI சொன்னது…
26 செப்டெம்ப்ர், 2011 1:18 pm 
நன்றி

ஸ்ரீராம். சொன்னது…
26 செப்டெம்ப்ர், 2011 3:27 pm 
அப்பாடி...எனக்கு ஏற்கெனவே தெரிந்த விவரம் முதன்முறையாக...ஆனால் என் பிரச்னை வேறு. கொஞ்ச நாள் முன்பு வரை வி எல் சி ஒழுங்காக வேளை செய்து கொண்டிருந்தது. இப்போதெலாம் எத்தனை முறை அன் இன்ஸ்டால் செய்து மறுபடி நிறுவினாலும் படங்கள் பார்க்கும்போது விட்டு விட்டு ஓடுவதால் என்னால் அதை உபயோகிக்க முடியவில்லை.

Post Comment