என் நீண்ட நாள் கனவு

என் நீண்ட நாள் கனவு
       ன் மனதினில் ஆயிரமாயிரம் கனவுகள், இந்த உலகினில் உள்ள அனைத்து தொழில் நுட்பங்களும் கற்றறிந்தவனாய் எந்த துறையாயினும் அனைத்தும் அறிந்தவனாய் இருக்க ஆசை ஆசையென்பதைவிட பேராசைக்-கொண்டவனாய். ஆனால் என் சூழ்நிலை வளர்ந்த(வளர்த்த) விதம் அவ்வாறு ஏதோ இன்று என்னளவில் ஏதோ கொஞ்சம் கற்றறிந்து தொழில் செய்துகொண்டிருக்கிறேன்.
     நான் செய்யும் தொழில்துறையிலும் கூட ஏதாவது ஒரு புதுமையை அதே சமயம் இலகுவான, வித்தியாசமான முறையை கையாளுகிறேன். என் மனதினில் எப்போதும் ஏதாவது சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். நான் கல்விக் கற்கும்போது இந்த கணணியியல் அந்த அளவு முன்னேற்றம் காணவில்லை. அதுவும் என்னளவில் சூன்யம்(பூஜ்ஜியம்) நானாகவே படித்தும் யூகித்தும் இந்தளவிற்க்கு முன்னேறியுள்ளேன்.
     னாலும் இது போதாது மேலும் தொடர்ந்து வளரவேண்டும். அதற்க்கு காலம் கனிந்து வரவேண்டும். என் மகனுக்கு நல்லதொரு பணியமர்த்தம் கிடைத்தப்பின், எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பேரப்பிள்ளைகளுடன் மற்றும் இந்த கணணித்துறையிலும் காலம் பயனுள்ளதாய் செலவிட வேண்டும்.
     னக்கு சொந்தமாய் என்மனதில் உள்ளதை செயற்படுத்தும் முறையில் ஒரு மனை (வீடு) அமைக்கவேண்டும். ஏனென்றால் கட்டுமானத்துறையிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. தேவையான அளவிற்க்கு வீடு கட்டிக்கொண்டு மீதம் உள்ள இடத்தில் நல்லக்காற்றோட்ட வசதிக்காக பலன்தரும் மரம், செடிகள் நடவேண்டும். எனக்குத் தோட்டக்கலையிலும் அதிகளவு ஈடுபாடு உண்டு. நான் தற்போது குடியிருக்கும்(வாடகை வீடு) வீட்டில் கூட சின்னஞ்சிறு தொட்டிகளில் பூஞ்செடிகளை வளர்க்கிறோம்.
மேலும் தொடருவேன்


கனவு – 2
டிக்கும் போது கூட (பள்ளிப்படிப்புதற்போது திரு.அப்துல்கலாம் அவர்கள் கூறியது போல அதிக கனவுகள்காண்பதுண்டு ஏதேனும் பலிக்கக் கூடாதாஎன்றுநான் படித்தது உயர்நிலைப்படிப்பு அன்றைய 11ம் வகுப்புபொறியியல் துறை விருப்பப்பாடமாக எடுத்து படிக்கும் போது கூட அதில் ஒரு பாடப்பிரிவான தச்சுத்தொழில்மற்றும் தகரத்தொழில் கற்றதால் எனக்கு சொந்தமான வீடு கட்டுமானப் பணியினை என் மனதில் கற்பனையாய்வரிந்து இருந்தேன்அது எப்போது நனவாகுமோதற்போது கூட கட்டுமானத்துறையில் பலப்புதியநுணுக்கங்களைக் கொண்டு நல்லதொரு வீட்டை வடிவமைத்துள்ளேன்(கற்பணையில்காலம் தான் பதில் தரும்.
ன் மகன் நான் படிக்க முடியாத பொறிஞர் பட்டயப்படிப்பு படித்தது கண்டு மிகவும் சந்தோசப் படுகிறேன்.அதே நேரத்தில் அவருக்கு படிப்புக்குத் தகுந்த நல்லதொரு தொழில் அமைந்து அவரது வாழ்க்கை சிறக்கக் கனவுக்காணுகிறேன்பிறகுதான் இதற்க்கு முன் நான் கண்ட கனவை நனவாக்க வாய்ப்பு வரும்.
ன்னடா இவன் இதுவரை தன் வாழ்க்கைக்கனவுப் (சுயநலமாய்பற்றியே கூறுகிறேனே என்று திட்டாதீர்கள்.எனக்குப் பொதுநலத்திலும் அக்கறையுண்டு நம் நாடு என்பதைவிட உலகம் முழுவதும் ஒன்றாய் வாழ(ஒற்றுமையாய்அந்த உலகைக் காண்பதற்க்குஎங்குப்பார்த்தாலும் சன்டை மொழி வாரியாய்இனவாரியாய் இதுஇல்லாமல் உள்ள உலகைக் காணக் கனவுக்காணுகிறேன்.
ங்கு பணிப் புரியுமிடத்தில் கூட அனைவரும் கேட்பதுண்டு ஏன் தங்களுக்குக் கோபமே வராதாஎன்றுநான் இருக்குமிடத்தில் எப்போதும் கலகலப்பாய்பொதுவாய் சிந்தித்துப்பார்த்தால்கோபப் பட்டவன்கூட நான் ஏன்கோபப்பட்டோம் என்று வெட்கித்தலை குனியவேண்டும்.
கனவுகள் தொடரும்….               


Post Comment